With other 7 Chief Secretaries on 01.07.2004
Saturday, May 30, 2009
Yoharajan added some more photos of CS.
With other 7 Chief Secretaries on 01.07.2004
"கணினி ஆசான்" இறுவட்டு வெளியீடு

வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளராக கடமையாற்றி 01.01.2007 தொடக்கம் வட மாகாண பிரதம செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எம் பெருமதிப்பிற்குரிய திருவாளர் எஸ்.ரங்கராஜா
அவர்களுக்கு சமர்பணம் செய்யப்படுகின்றது.
அவருக்கு நிகர் அவரே

பழமைவாதமும் பாரம்பரிய முறைகளும் இக்கால உலகத்தோடு சேர்ந்தோடுவதற்கு உதவாது என்பதைப் புரிந்துகொண்டு அரச துறையில் பல மாற்றங்களையும் யுக்திகளையும் உட்புகுத்தி வெற்றியும் கண்டவர். அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் காலமாற்றத்தால் அழிக்கப்பட முடியாதவை. அவரை நினைக்கும் போது அவரது வேகமும் சுறுசுறுப்பும் தான் முதலில் நினைவில் நிற்கும். இத்தனை மெல்லிய மனிதரில் இத்தனை ஆளுமைகளா என வியக்கத் தோன்றும். அகவை அறுபதை அடையும் இந்நாளில் அவர் இலட்சியங்கள் வெற்றிபெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
***
பிரதம செயலாளரின் சேவை சார்ந்த விடயங்களை பதிவுசெய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டதே இவ் வலைப்பதிவு. அவரதும் அவரது சேவை சார்ந்ததுமான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எமது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள். இதுவரை பல்வேறுபட்ட ஆக்கங்களை எமக்குத் தந்துதவிய அனைத்து அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.அன்புடன்
எஸ்.முரளி
OIS TEAM
மின்னஞ்சல்: oisteam@yahoo.com
Rangarajah is a mystic

With regards,
A.Pankayatchelvi.
Friday, February 6, 2009
சிந்தையிலிருந்து சில வரிகள்...

அறிவான சொல்லொன்றும் - எம்
அப்பாவைப் போன்றவரும் - நல்
ஆசானாய் எடுத்துரைப்பார்.
சீலமாய் கற்றுணர்ந்து,
சிந்தையிலே நாம் பதிக்க,
காலத்தால் அழியாத,
கருத்துக்களை அவர் உரைப்பார்.
நெஞ்சுக்குள் ‘டிக்’ என்று,
நேரில் நான் செல்வேனே.,
அஞ்சும் விழியுடனே…
அங்கே நான் சென்றாலும்,
பஞ்சாகிப் போய்விடுமே – நம்
பிரதானி சொற் கேட்டு.
தஞ்சம் கொண்டவரை,
தாய் போலக் காத்திடுவார்.
அலையலையாய் அறிவுரைகள்,
அடுக்கடுக்காய் தந்தீரே,
சிலையாக என் மனதில்,
சித்திரமாய் பதிந்தீரே,
விலையில்லா கருத்துக்களை,
விதை போட்டீர் எனக்குள்ளே,
தலை தாழ்த்தி வணங்கின்றேன்,
தலைமையே உமை நானும்.
-அன்புடன் திருமதி.தி.கல்பனா.
Saturday, January 31, 2009
சமர்ப்பணமாய் ஓர் வலைப்பதிவு

கோர்த்து ஓர் மாலையாக்குவது போல் - நீங்கள் மனதில்
கட்டி வைத்த கோட்டையெல்லாம்
கருத்தினில் கொண்டு செயற்பட்டு
தொட்டுவிட்ட சிகரங்களை
தொகுத்து ஓர் வலைபதிவாக்கி – எதையும்
விட்டவிட மனமில்லாமல்
விருந்தாகக் கொடுக்கின்றோம்
பூஞ்சோலை எம் சபை
அதில் பூத்துக்குழுங்கும் மலர்கள் நாமானால்
அழகான தாமரை நீங்கள் தானே
தா மரை போன்ற எங்களை
தாயன்புடன் ஓன்றிணைத்து
தரணியின் வளர்ச்சியுடன் எம்
தமிழ் மண்ணும் வளர எண்ணி
தனியொரு வலையமைப்பை தந்து
தமிழ் நிமிர எம் தலை நிமிர வைத்தீரே
தங்கள் சேவைக்கு தந்தோம் பரிசாய்
ஓர் வலைப்பதிவு
வட்டமான எம்மறிவை
வலையமைப்பை நிறுவி
வட்டத்தின் வெளியாக்கி
வளர வைத்த உங்களுக்கு,
வாழ்க்கை புத்தகம் போல் ஓர் வலைப்பதிவு
வளரும் நாங்கள் தருகின்றோம்.
எட்ட வைத்துப் பேசும் உயர் அதிகாரிகளின் மத்தியிலே
கிட்ட வந்து பட்டறிவும் கேட்டறிவும் பகிர்ந்து
தொட்டுவிட்ட வேலையினை தோளோடு தோள் நின்று
எட்டிவிடும் முதல்வர் எம் பிரதம செயலாளர்
பெற்றுத் தந்த அறிவால் பெருமையுடன் வளர்ந்த நாம்
கற்று தந்த உங்களுக்கு கணினி வலையினிலே
ஓர் பதிவு பரிசாக தருகின்றோம்.
- அன்புடன் ப.தவராஜா
Friday, January 30, 2009
Yoharajan added some photos of CS.
Subscribe to:
Posts (Atom)