மதிப்புக்குரிய எமது பிரதம செயலாளர் அவர்கள் பலர் வாழக்கைக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றார்.அவரைப் பார்த்து வியந்த விடயங்கள் பல உண்டு. அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. தனது கருத்தை தெளிவுடனும் தொலைநோக்குடன் கூறி அதனை முற்கொண்டு சொல்வதில் அவருக்கு நிகர் அவர் தான். அரச துறையின் செயற்பாடுகள் எப்போது ஆமை வேகத்திலேயே செல்லும் எனும் கருத்து பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகின்றது. ஆனால் இந்த கருத்தை உடைந்தெறிந்து அரச துறையில் உள்ளவர்களாலும் வேகமாகச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல முடியும் என்று நிருபித்துக்காட்டியவர். இதன் மூலம் மேன்மையடையலாம் என்பதை உணரச் செய்தவர். "Capture the opportunity" என்பது அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாகும். இதிலிருக்கும் உண்மை அவரினால் மேன்மையடைந்தவர்க்கு நன்கு புரியும்.பழமைவாதமும் பாரம்பரிய முறைகளும் இக்கால உலகத்தோடு சேர்ந்தோடுவதற்கு உதவாது என்பதைப் புரிந்துகொண்டு அரச துறையில் பல மாற்றங்களையும் யுக்திகளையும் உட்புகுத்தி வெற்றியும் கண்டவர். அவர் விட்டுச் செல்லும் சுவடுகள் காலமாற்றத்தால் அழிக்கப்பட முடியாதவை. அவரை நினைக்கும் போது அவரது வேகமும் சுறுசுறுப்பும் தான் முதலில் நினைவில் நிற்கும். இத்தனை மெல்லிய மனிதரில் இத்தனை ஆளுமைகளா என வியக்கத் தோன்றும். அகவை அறுபதை அடையும் இந்நாளில் அவர் இலட்சியங்கள் வெற்றிபெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
***
பிரதம செயலாளரின் சேவை சார்ந்த விடயங்களை பதிவுசெய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டதே இவ் வலைப்பதிவு. அவரதும் அவரது சேவை சார்ந்ததுமான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எமது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள். இதுவரை பல்வேறுபட்ட ஆக்கங்களை எமக்குத் தந்துதவிய அனைத்து அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.அன்புடன்
எஸ்.முரளி
OIS TEAM
மின்னஞ்சல்: oisteam@yahoo.com
No comments:
Post a Comment