Friday, February 6, 2009

சிந்தையிலிருந்து சில வரிகள்...

ஆழக் கருத்துக்களும்,
அறிவான சொல்லொன்றும் - எம்
அப்பாவைப் போன்றவரும் - நல்
ஆசானாய் எடுத்துரைப்பார்.
சீலமாய் கற்றுணர்ந்து,
சிந்தையிலே நாம் பதிக்க,
காலத்தால் அழியாத,
கருத்துக்களை அவர் உரைப்பார்.

நெஞ்சுக்குள் ‘டிக்’ என்று,
நேரில் நான் செல்வேனே.,
அஞ்சும் விழியுடனே…
அங்கே நான் சென்றாலும்,
பஞ்சாகிப் போய்விடுமே – நம்
பிரதானி சொற் கேட்டு.
தஞ்சம் கொண்டவரை,
தாய் போலக் காத்திடுவார்.

அலையலையாய் அறிவுரைகள்,
அடுக்கடுக்காய் தந்தீரே,
சிலையாக என் மனதில்,
சித்திரமாய் பதிந்தீரே,
விலையில்லா கருத்துக்களை,
விதை போட்டீர் எனக்குள்ளே,
தலை தாழ்த்தி வணங்கின்றேன்,
தலைமையே உமை நானும்.

-அன்புடன் திருமதி.தி.கல்பனா.