Saturday, January 31, 2009

சமர்ப்பணமாய் ஓர் வலைப்பதிவு

கொட்டிவிட்ட மலர்களை
கோர்த்து ஓர் மாலையாக்குவது போல் - நீங்கள் மனதில்
கட்டி வைத்த கோட்டையெல்லாம்
கருத்தினில் கொண்டு செயற்பட்டு
தொட்டுவிட்ட சிகரங்களை
தொகுத்து ஓர் வலைபதிவாக்கி – எதையும்
விட்டவிட மனமில்லாமல்
விருந்தாகக் கொடுக்கின்றோம்

பூஞ்சோலை எம் சபை
அதில் பூத்துக்குழுங்கும் மலர்கள் நாமானால்
அழகான தாமரை நீங்கள் தானே
தா மரை போன்ற எங்களை
தாயன்புடன் ஓன்றிணைத்து
தரணியின் வளர்ச்சியுடன் எம்
தமிழ் மண்ணும் வளர எண்ணி
தனியொரு வலையமைப்பை தந்து
தமிழ் நிமிர எம் தலை நிமிர வைத்தீரே
தங்கள் சேவைக்கு தந்தோம் பரிசாய்
ஓர் வலைப்பதிவு

வட்டமான எம்மறிவை
வலையமைப்பை நிறுவி
வட்டத்தின் வெளியாக்கி
வளர வைத்த உங்களுக்கு,
வாழ்க்கை புத்தகம் போல் ஓர் வலைப்பதிவு
வளரும் நாங்கள் தருகின்றோம்.

எட்ட வைத்துப் பேசும் உயர் அதிகாரிகளின் மத்தியிலே
கிட்ட வந்து பட்டறிவும் கேட்டறிவும் பகிர்ந்து
தொட்டுவிட்ட வேலையினை தோளோடு தோள் நின்று
எட்டிவிடும் முதல்வர் எம் பிரதம செயலாளர்
பெற்றுத் தந்த அறிவால் பெருமையுடன் வளர்ந்த நாம்
கற்று தந்த உங்களுக்கு கணினி வலையினிலே
ஓர் பதிவு பரிசாக தருகின்றோம்.

- அன்புடன் ப.தவராஜா

Friday, January 30, 2009

Yoharajan added some photos of CS.


Briefing to MPs.








The first video conference








World Bank assistance to NEHRP








World Bank assistance to NEHRP








At PPC meeting








At PPC meeting








CIRM opening ceremony

வட மாகாண வரலாற்றின் ஒரு காவியத் தலைவன்

எமது பிரதம செயலாளர் மதிப்பிற்குரிய திரு சி.ரங்கராஜா அவர்களைப் பற்றி கூறுவதாயின் அவை அளப்பரியன. அவர் பிரதம செயலாளராக இருந்த காலப்பகுதியில் அவர் ஆற்றிய பணிகளில் ஒன்றான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை பற்றி கூறுவது இன்றியமையாதது.
வட மாகாண சபையில் தகவல் தொழில்நுட்பத்தின் தேவை கண்டு அதற்கு ஒரு பரிமாணம் கொடுத்து அதனை நன்றே நிறுவிய ஓர் சிந்தனையாளர்.
இவர் தனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து தொழிற்பாட்டு தகவல் முறைமை (Operational Information System) எனும் தனி அலகினை திட்டமிடல் செயலகத்தின் கீழ் நிறுவி அதன் மூலம் வட மாகாண சபையினால் வழங்கப்படும் சேவைகள் யாவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிநாதமாகக் கொண்டு நடைபெறவேண்டும் எனும் வேட்கை கொண்டு அதில் பெரும் வெற்றியும் கண்டு கொண்ட பேராளன்.
மேலும் இவர் தலைமைத்துவம்இ முகாமைத்துவம் இ திட்டமிடல் ஆகியன ஒரு சேர கைதேர்ந்த வட மாகாண வரலாற்றின் ஒரு காவியத் தலைவன் என்று கூறினால் மிகையாகாது. இவரது சிந்தனைகள் மற்றும் செயல் வடிவங்கள் என்றும் வட மாகாண சபையில் நிலைபெற எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

- அன்புடன் க.சடகோபன்.

ஆதவனாய் வாழ்பவரே!

கடல் சூழும் மலை கொண்ட நிமலனடி போற்றிவரும்
தடம் பதித்த பொன்னாலை பெற்றெடுத்த பெருமகனார்
திடமான தத்துவங்கள் திறம்படவே போதிக்கும்
இடர் தீர்க்கும் உளம் கொண்ட ரங்கராஜா நீர் வாழி

திக்குத் தெரியாது திசை மாறிப் பரிதவித்த
மக்கள் மனமறிந்து மாற்றங்கள் தருவித்து
சிக்கல் பலகளைந்து சிறப்பாக வழிகாட்டும்
காக்கும் பெருங்கடலே காலமெல்லாம் நீர் வாழி

அகவை அறுபதை அடைந்தாலும் இளையவன் நீர்
ஆக்கங்கள் பல தந்து ஆதவனாய் வாழ்பவரே
மாற்றங்கள் பல காண மாயவனாய் வந்துதித்தீர்
பூத்த தாமரையாய் புதுமைகள் செய்கின்றீர்

சமூகத்தின் பக்கமே பார்வைகள் பல கொண்டு
ஏழ்மையை அழிப்பதற்கு எண்ணினீர் திடமாக
குழுவாக உழைப்பதையே குறியாகக் கொண்டவரே
தழுவவில்லை ஒருபக்கம் தவறவில்லை நடுநிலையில்

நிர்வாகத் திறமையுடன் நிலையான திட்டங்கள்
வடகிழக்கு மக்களுக்காய் வரைந்திட்டீர் பக்குவமாய்
நிலைபேற்றுத் தன்மை கொண்ட நிலையான வாழ்வதனை நிறைவாகப் பெற்றிடவே நீர் வகுத்தீர் பலவழிகள்

தன்னிறைவுச் சமூகமதை தருவதற்கு முனைப்புடன்
நின் அறிவுச் சுடரதனை நிரப்பி வைத்தீர் அதற்காக
கண்துஞ்சா பசியறியா முறைமைகள் பல சமைத்து
விண்மகனுக்கிணையாக விரைவுடனே செய்பட்டீர்

தொழில்நுட்ப அறிவுடனே தொலைநோக்கில் சிந்திக்கும்
தெளிவான சிந்தையுடன் திக்கெட்டும் செயற்பட்டீர்
உமக்காக வாழாது உலகம் பயன்பெறவே
தன்னடக்க மனதுடனே தருமனாய் வாழ்கின்றீர்

காலங்கள் கனிந்துவரும் கனவுகள் மெய்ப்பிக்கும்
சாலைகள், கட்டங்கள் சடுதியிலே விருத்தி பெறும்
மக்கள் மனமதிலே மகிழ்ச்சிகள் ஊற்றெடுக்கும்
நீடித்த நிறைவான வாழ்வுகள் நிலைத்துவிடும்

- அன்புடன் இ.உமாகாந்தன்

அகவை அறுபதில் எமது பிரதம செயலாளர்

அன்பின் உறைவிடமாய், பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் சிகரமாய், கடமையில் இலட்சிய வீரனாய் எம்மை வழிநடத்தும் பெருமதிப்புக்குரிய தலைமைச் செயலாளர் திரு.சி.ரங்கராஜா அவர்கள் 2009.02.02 இல் அகவை அறுபதைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு எனது வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன். மேலும் இவர் 'பெரிய நெருக்கடிகளுக்கிடையே தான் , இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுத்திருக்கின்றான்' என்ற அமுத வாக்கிற்கு இணங்க தனது அரச சேவையில் பல வெற்றிகளைப் பெற்று, முதலிடத்தில் இருக்கின்றார். இவரது சேவைகளையும் இவருக்குள் இருக்கும் திறமைகளையும் நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்வதற்காக இவரின் உன்னத வழிநடத்தலினால், உச்சப்பயன்பாட்டினைப் பெற ஏதுவாக, பிரத்தியேக இணையத் தளம் (வலைப்பதிவு) ஒன்றை உருவாக்கும் எமது OIS குழுவினருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.

- அன்புடன் இ.இரவீந்திரன்.

வடக்கின் கலங்கரை விளக்கு

அன்று வடகிழக்காய் இருந்த போது 
எட்டு மாவட்டங்களையும் 
கட்டி ஆண்ட பிரதம செயலாளரே
இன்று வடக்கின் ஐந்து மாவட்டங்களின் 
கலங்கரை விளக்காக திகழ்பவரே
அனைத்து மாகாண சபை அதிகாரிகளும்
ஆலோசனை கேட்டுவரும் ஆசானே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

பாதியிலே கிடந்த கட்டடத்திலே 
ஒட்டு மொத்த மாகாணசபையையும்
ஒருங்கமைத்த சாதனையாளனே
பட்டியலிட்டு கூற முடியாதளவு 
புதிய திட்டங்களை வகுக்கும் 
சிறந்த திட்டமிடலாளனே
அலுவலர் நாம் அலைச்சலின்றி சென்றுவர
அலுவலக போக்குவரத்துச் சேவையை
உருவாக்கித் தந்த அன்பாளனே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

அலுவலக குறைநிறைகளை ஆராய
Hotspot ஐயும்
அலுவலரிடையே அறிவைப் பகிர்ந்து கொள்ள 
அறிவுப்பகிர்வு நிகழ்ச்சியையும்
அலுவலகத் தகவல்களை அறிந்து கொள்ள
அலுவலகத் தகவல் முறைமையையும்
அலுவலகங்களிடையே தொடர்பாடலை ஏற்படுத்த
உள்ளக வலையமைப்பையும்
உருவாக்கித் தந்தவரே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

நவீன கணினியுகத்திற்குள் நம்மை எல்லாம்
இட்டுச் சென்றவரே
இரவு பகல் பாராது விடுமுறை நாள் பாராது
நோய் நொடியைப் பொருட்படுத்தாது
கடமையே கண்ணென்று வாழும்
பிரதம செயலாளரே
நீர் நீடுழி வாழ எம் வாழ்த்துக்கள்!

- அன்புடன் க.மதுராந்தகி

Thursday, January 29, 2009

உன்னத சேவையாளன்

வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தின் பிரதம செயலாளர் திரு.சி.இரங்கராஜா அவர்களுக்கு பெருமை சேர்ப்பது அவரது அர்ப்பணிப்பின் ஆழமும், சேவையின் உயர் தரமும், உன்னதத்தில் அவர் காட்டும் நாட்டமும் ஆகும்.அவரது தலைமைத்துவம் தான் போகவேண்டிய பாதையை நன்கறிந்து அப்பாதையில் சென்று மற்றவர்களுக்கும் பாதையைக் காட்டும் ஒன்றாகும்.
வெற்றிக்கான இரகசியம், வாய்ப்புக்களைப் பயன்படுத்த ஆயத்தமாயிருத்தல் என்ற கோட்பாட்டைக் கொண்டு செயற்படுபவர் ஆவார்.
அவருடன் பணிபுரிவதை ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகின்றேன்.

- அன்புடன் ரி.குலவீரசிங்கம்

வடக்கின் வழிகாட்டி

சிந்தனை செயல் இரண்டும்
சேர்ந்தமைந்த செயல்வீரன்
திட்டமிட்டு செயலாற்றும்
தீர்க்க சிந்தனை உளம் உடையோன்

அன்பும் அரவணைப்பும் ஆழ்ந்த நல்நட்பும்
பக்குவமாய் பழகும் பாங்குமுள்ள பண்புடையோன்
எண்ணிய கருத்தை எச்சபையிலும் எடுத்தியம்பும்
திண்ணிய சிந்தனை கொண்டோன்

அரசபணி ஆன்மீகம் அறிவியல் அரசியல்
அனைத்திலும் ஆழ்ந்த அறிவுடையோன்
எடுத்தபணி யாவையும் இரவு பகல் பாராது
முற்றும் முடித்துவிட துடிக்கும் வீச்சாளன்

தகவல் தொழில்நுட்ப தந்திரத்தை புரிந்து வைத்து
புதுப்புது புதுமைகளைப் படைக்கும் புரட்சிவீரன்
வலையமைப்பு வலைப்பதிவு என வளர்த்துவரும்
எங்கள் வடக்கின் வழிகாட்டி


- அன்புடன் பா.கஜேந்திரன்

நுட்பத்தின் நுட்போன்

தகவல் தொழில்நுட்பத்தினை
அறியும் நுட்பமும்,
அறிவிக்கும் நுட்பமும்,
ஆனவர்கள் அறிய
ஆவலூட்டும் நுட்பமும்
அறிந்த நுட்போனே
உங்கள் நுட்பம் எம்மண்ணில்
என்றும் வளர்ந்திட
நன்றியுடன் வாழ்த்துக்கள்.

- அன்புடன் சி.சுரேந்திரன்.

என் வாழ்க்கைப் புத்தகத்தில் நீங்கள் ஓர் அத்தியாயம்

17.09.2007 இல் எமது செயலாளரை
முதன் முதலில் சந்தித்தேன்.
அன்றே OIS இல் நானும் ஓர் Member ஆனேன்
அன்றிலிருந்து
கற்றவற்றை மீட்டு
கல்லாதவற்றை கற்றுணர்ந்து
பெற்றிட்டேன் நல்லறிவு
பெருமையுடன் சொல்கின்றேன்
உங்களால் தான்

Website ஒன்றை நானே வடிவமைத்து
வலையமைப்பில் உலாவரச் செய்ய
வல்லமை பெற்றுத் தந்து
வாழ்நாளில் மறக்காத மனிதரானீர்

உங்கள் வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
நாமெல்லாம் ஓர் வரியானால்
எம் வாழ்க்கைப் புத்தகத்தில் நீங்கள்
ஓர் அத்தியாயம் ஆவீர்கள்

-அன்புடன் ப.தவராஜா

Thushi added some photos of Chief Secretary


பிரதம செயலாளர் செயலகம் அன்று..








ABC கட்டத்தொகுதியின் வேலைப் பணிகளை கண்காணிக்கும் போது..






CAARP இற்கான 15 வது PPSC கூட்டத்தில்..








OIS சம்பந்தமான கலந்துரையாடலில்







நடேசர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது