
தடம் பதித்த பொன்னாலை பெற்றெடுத்த பெருமகனார்
திடமான தத்துவங்கள் திறம்படவே போதிக்கும்
இடர் தீர்க்கும் உளம் கொண்ட ரங்கராஜா நீர் வாழி
திக்குத் தெரியாது திசை மாறிப் பரிதவித்த
மக்கள் மனமறிந்து மாற்றங்கள் தருவித்து
சிக்கல் பலகளைந்து சிறப்பாக வழிகாட்டும்
காக்கும் பெருங்கடலே காலமெல்லாம் நீர் வாழி
அகவை அறுபதை அடைந்தாலும் இளையவன் நீர்
ஆக்கங்கள் பல தந்து ஆதவனாய் வாழ்பவரே
மாற்றங்கள் பல காண மாயவனாய் வந்துதித்தீர்
பூத்த தாமரையாய் புதுமைகள் செய்கின்றீர்
சமூகத்தின் பக்கமே பார்வைகள் பல கொண்டு
ஏழ்மையை அழிப்பதற்கு எண்ணினீர் திடமாக
குழுவாக உழைப்பதையே குறியாகக் கொண்டவரே
தழுவவில்லை ஒருபக்கம் தவறவில்லை நடுநிலையில்
நிர்வாகத் திறமையுடன் நிலையான திட்டங்கள்
வடகிழக்கு மக்களுக்காய் வரைந்திட்டீர் பக்குவமாய்
நிலைபேற்றுத் தன்மை கொண்ட நிலையான வாழ்வதனை நிறைவாகப் பெற்றிடவே நீர் வகுத்தீர் பலவழிகள்
தன்னிறைவுச் சமூகமதை தருவதற்கு முனைப்புடன்
நின் அறிவுச் சுடரதனை நிரப்பி வைத்தீர் அதற்காக
கண்துஞ்சா பசியறியா முறைமைகள் பல சமைத்து
விண்மகனுக்கிணையாக விரைவுடனே செய்பட்டீர்
தொழில்நுட்ப அறிவுடனே தொலைநோக்கில் சிந்திக்கும்
தெளிவான சிந்தையுடன் திக்கெட்டும் செயற்பட்டீர்
உமக்காக வாழாது உலகம் பயன்பெறவே
தன்னடக்க மனதுடனே தருமனாய் வாழ்கின்றீர்
காலங்கள் கனிந்துவரும் கனவுகள் மெய்ப்பிக்கும்
சாலைகள், கட்டங்கள் சடுதியிலே விருத்தி பெறும்
மக்கள் மனமதிலே மகிழ்ச்சிகள் ஊற்றெடுக்கும்
நீடித்த நிறைவான வாழ்வுகள் நிலைத்துவிடும்
- அன்புடன் இ.உமாகாந்தன்
No comments:
Post a Comment